சிவகங்கை மாவட்டம் ஓ.புதூர் பஞ்சாயத்து அண்ணாநகர் பி.எல்.எஸ். நகர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் ஆய்வு செய்து அப்பகுதியில் குடிநீர் தடையின்றி சீராக வினியோகிக்கப்படுகிறது. எனவே தங்கள் பகுதி புகாரினை நாளிதழில் வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.