சாலையோரம் தேங்கி நிற்கும் தண்ணீர்

Update: 2026-10-18 11:35 GMT
தியாகதுருகம் அருகே அண்ணாநகர் பகுதியில் சாலையோரம் மழை நீர் தேங்கி கிடக்கின்றன. இதனால் இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வாகனங்களை முந்தி செல்லும்போதும், சாலையோரம் செல்லும் போது மழை நீர் தேங்கியுள்ள பள்ளத்திலும் சேரும் சகதியுமான இடத்திலும் தவறி விழுகின்ற அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் உள்ள சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் தண்ணீரை வெளியேற்றவும், அவ்வாறு தண்ணீர் வெளியேற்றப்பட்ட இடத்தில் கிராவல் மண் கொட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்