கிடப்பில் போடப்பட்ட நீர்த்தேக்க தொட்டி பணி

Update: 2026-10-18 11:33 GMT
நடுவீரப்பட்டு அருகே உள்ள சஞ்சீவிராயன்கோவில் கிராமத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பணிகள் ஏதும் நடைபெறாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அருகில் உள்ள வயலுக்கு சென்று தண்ணீர் கொண்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிராம மக்களின் நலன்கருதி பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்