புதூர் சந்திப்பு பகுதியின் கிழக்கு பக்கம் நெடுஞ்சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் பாய்வதுடன், சில இடங்களில் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைப்பதுடன், மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்காதவாறு வடிகால் வசதி ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூர்யா,புதூர்.