வாரச்சந்தையில் தேங்கும் மழைநீர்

Update: 2026-10-25 16:33 GMT

சேந்தமங்கலம் அடுத்த பொம்மசமுத்திரம் ஊராட்சியில் ராமநாதபுரம் புதூர் கிராமம் ஊராட்சி மன்ற அலுவலக பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. மழைக்காலங்களில் அந்த சந்தை திடலின் நுழைவு வாயிலில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே வாரச்சந்தை முன்பு மழைநீர் தேங்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்