ஆழ்துளை கிணறு மின் மோட்டார் பழுது

Update: 2026-10-25 12:14 GMT

வேலூர் மாநகராட்சி மண்டலம் 1-ல் செங்குட்டை பகுதியில் வார்டு எண்:1 மற்றும் 4 ஆகிய பகுதிகளில் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நீர் 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் பிற பயன்பாட்டுக்கான நீரை பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் ஆழ்துளை கிணறுகளில் மின் மோட்டார்கள் செயல்படும் நிலையில் உள்ளதா? என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வார்டு எண்:1-ல் சத்திரம் தெருவில் உள்ள ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டார் பழுதாகி 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாரை பழுதுப் பார்த்து இயக்க வேண்டும்.

-பி. துரை, செங்குட்டை, காட்பாடி. 

மேலும் செய்திகள்