தேங்கிய மழைநீரால் நோயாளிகள் அவதி

Update: 2026-10-25 19:56 GMT

வாணியம்பாடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் வந்து செல்கின்றனர். எனவே மருத்துவமனை வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலசுந்தரம், வாணியம்பாடி. 

மேலும் செய்திகள்