கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் மண் கலந்து நிறம் மாறி வினியோகிக்கப்படுகிறது. இதனால் அந்த குடிநீரை குடிக்கும் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே மழைக்கால நோய்களால் பலர் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே சுகாதாரமான குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.