விருத்தாசலம் அடுத்த பேரளையூர் ஊராட்சியில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. தற்போது முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, பயன்பாடின்றி ஆபத்தான நிலையில் உள்ள பழைய தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக அந்த இடத்தில் மோட்டார் அறை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.