ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2026-11-01 19:24 GMT

திருப்பத்தூர் மாவட்டம் இருணாபட்டு ஊராட்சியில் எட்டிகுப்பம் கிராமம் உள்ளது. அங்கு, சுமார் 50-க்கும் மேற்பட்ட பட்டியல் சமூக மக்கள் வசிக்கின்றனர். அந்த மக்களின் குடிநீர் தேவைக்காக சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. அந்தத் தொட்டி சிதிலமடைந்து தூண்கள் பலவீனமாக, ஆபத்தான நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் அச்சம் உள்ளது. அந்தக் குடிநீர் தொட்டியை உடனடியாக அகற்றி விட்டு புதிய தொட்டி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராதாகிருஷ்ணன், பொம்மிகுப்பம். 

மேலும் செய்திகள்