அரகண்டநல்லூரில் அதுல்யநாதஸ்வரர் மலைக்கோவிலில் உள்ள குளம் முறையான பராமரிப்பின்றி குப்பைகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் தேங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் குளத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, கோவில் குளத்தை சீரமைத்து, குப்பைகளை அகற்றி சுகாதாரமாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.