கசியும் குடிநீரால் சாலை சேதம்

Update: 2026-11-15 10:03 GMT

பொள்ளாச்சி எஸ்.எஸ். கோவில் தெரு குப்புசாமி ரோடு சந்திக்கும் இடத்தில் புதிதாக குடிநீர் குழாய் மற்றும் கட்டுப்பாட்டு வால்வு அமைக்கப்பட்டது. இந்த குழாயில் இருந்து குடிநீர் கசிந்து வீணாகி வருகிறது. இதனால் அங்குள்ள சாலையும் சேதமடைந்து வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண உயர் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்