பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், சிறுவயலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய விராலிப்பட்டி கிராமத்தில் உள்ள 5 ஏக்கர் பரப்பளவிலான கசிவுநீர் குட்டையின் கடைக்காலில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குட்டையில் தண்ணீர் தேங்காமல் வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குட்டையின் உடைப்பை சீரமைத்து தண்ணீரை தேக்கி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.