பர்கூர்-வாணியம்பாடி கூட்ரோட்டில் பர்கூர் பயணியர் ஆய்வு மாளிகை எதிரில் கடந்த சில மாதங்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலதாமதம் இன்றி சரி செய்து சீரான குடிநீர் வழங்க வேண்டும்.