விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் அயன்நாய்ச்சியார்கோவில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கீழப்பொட்டல் பட்டி கிராமத்தில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். சிலர் அதிக பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதி மக்கள் நலன் கருதி தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.