வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் மாநகராட்சியினர் குப்பைப் பிரிக்கும் இடத்தின் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. அதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தில் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்