குடிநீர் தொட்டி அருகே குப்பைகள்

Update: 2026-11-15 19:03 GMT

பொன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பொன்னை ஆற்றங்கரையோரம் பொன்னை கிராமத்துக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. பொன்னை ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகளை குடிநீர் தொட்டி அருகே கொட்டுகிறார்கள். அந்தக் குப்பைக்கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. அங்கு தேங்கி நிற்கும் கழிவுநீர் குடிநீரில் கலக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு தேங்கி நிற்கும் கழிவுநீர், குப்பைகளை அகற்ற வேண்டும்.

-சதீஷ்குமார், பொன்னை. 

மேலும் செய்திகள்