கோத்தகிரி நகராட்சி சார்பில் குடியிருப்புகளுக்கு அம்ருத் பாரத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்ய பணிகள் நடைபெற்று வந்தது. இதில் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ள பல பகுதிகளில் இன்னும் குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க குழாய்களை இணைக்கும் பணிகள் நிறைவடையாமல் தாமதமாகி உள்ளது. எனவே அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.