தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் பகுதியில் தஞ்சாவூரான் புதிய சாலையையொட்டி உள்ள குளத்தில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் தண்ணீர் மாசடைந்து, குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. மேலும், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குளத்தில் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து, குளத்தை தூய்மைப்படுத்த வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.