பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், சு.ஆடுதுறை கிராமத்தில் உள்ள குற்றம் பொறுத்தவர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் போதிய குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் அல்லது ஊராட்சி நிர்வாகம் குடிநீர் தொட்டி அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.