சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள குமாரக்குறிச்சி கிராமத்தில் உள்ள சாலையில் குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் குடிநீர் வீணாகி சாலையில் தேங்குகிறது. மேலும் இதனுடன் கழிவுநீரும் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தண்ணீர் தேங்குவதால் சாலை சேதமடைவதுடன், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே அப்பகுதி மக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் இணைப்பை சரிசெய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.