சிவகங்கை-திருப்பத்தூர் தேசியநெடுஞ்சாலையில் அண்ணாநகர் பி.எல்.எஸ். நகர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் அத்யாவசிய தேவைக்குகூட குடிநீர் கிடைக்காமல் சிரமமடைகின்றனர். மேலும் சிலர் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?