மதுரை அவனியாபுரம் 100-வது வார்டு பிரசன்னா காலனி வள்ளாந்தபுரம் பெரியார் நகர் செம்பூரணி ரோட்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் குழாய் உடைந்து குடிநீர் பல நாட்களாக சாலையில் செல்கிறது. குடிநீர் வீணாகுவதுடன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீர்த்தேக்க தொட்டி குழாயை சரிசெய்யவும், குடிநீர் வீணாவதை தடுக்கவும் நடவடிக்க எடுக்க முன் வர வேண்டும்.