கண்ணமங்கலம் பழைய சாலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணிக்கு பேருராட்சி சிறிய சிமெண்டு ஷீட்டுகள் அமைக்கப்பட்டது. இதன் உள்ளே குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் அமைத்து குறைந்த விலைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்கள் பெற்று வந்தனர். ஆனால் சில ஆண்டுகளாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்படவில்லை. தற்போது அந்த இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சிமெண்டு ஷீட் கொட்டகை மட்டும் உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு தரும் வகையில் உள்ள சிமெண்டு ஷீட் கொட்டகையை அகற்ற வேண்டும்.
-நடராஜன், கண்ணமங்கலம்.