சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலையில் பைபாஸ் அருவங்காடு பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாலையோர குடியிருப்பு வீடுகளிலும் மழைநீர் புகுந்து விடுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே மழைநீர் தேங்காதவாறு நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?