மொரப்பூர் அடுத்த எம்.தொப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஓபிலிநாயக்கன்பட்டி, கல்லாவி கூட்ரோடு, உழவர் நகர், குறிஞ்சி நகர், தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் உள்ள ஓபிலி நாயக்கன்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிணற்றிலிருந்து தண்ணீர் வணிகத்திற்காக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.. எனவே தண்ணீர் விற்கப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.