ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ரூ.5 நாணயம் செலுத்தினால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெறும் வகையில் குடிநீர் எந்திரங்கள் அமைக்கப்பட்டன. தற்போது குடிநீர் வினியோக எந்திரங்கள் அனைத்தும் பழுதாகி கிடக்கின்றன. இதனால் ஏற்காட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்துள்ள அனைத்து குடிநீர் எந்திரங்களையும் சரி செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.