சென்னிமலை அருகே முருங்கத்தொழுவு சரவணா கார்டனில் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சிக்கு சொந்தமான மின்மோட்டார் பழுதாகிவிட்டது. இதனால் கடந்த 3 மாதங்களாக பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தெருவிளக்கு வசதியும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் தெருக்களில் நடமாட அச்சமாக உள்ளது. குடிநீர் வசதியும், தெருவிளக்கு வசதியும் ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.