ஓமலூர் வட்டம் தேக்கம்பட்டி ஊராட்சி தே.கொல்லப்பட்டி ஒண்டிவீரன் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து 4 மாதம் ஆகிறது. ஆனால் பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரைக்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகிறாா்கள். எனவே உள்ளாட்சி துறை அதிகாரிகள் உடனடியாக, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தரவேண்டும்