குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2026-09-27 18:50 GMT

வாணியம்பாடி பெரியபேட்டை செல்லும் கிளையாற்றுப் பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தொடர்ந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. தரமற்ற பிளாஸ்டிக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளதால், இதுபோன்ற உடைப்புகள் அடிக்கடி ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நிரந்தர தீர்வு காணப்படவில்லை. தரமான குழாய்களை அமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேந்திரன், வாணியம்பாடி. 

மேலும் செய்திகள்