சேலம் மாநகராட்சி 16-வது வார்டு 4 ரோடு பெரமனூர் பகுதியில் உள்ள அம்பேத்கர் தெரு, புதூர் கல்லாங்குத்தூரில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சாக்கடை கால்வாய் அகலபடுத்தும் பணியின் போது பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது குடிநீர் குழாய் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த குடிநீர் குழாய்களும் சேதமாகின. பின்னர் ஒரு சில குடிநீர் குழாய்கள் மட்டும் சரிசெய்யப்பட்டது. பொது குடிநீர் குழாய்கள் இதுவரை சரிசெய்யாமல் காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் இந்த குறைபாட்டை இதனை சரிசெய்ய வேண்டும்.