கால்வாய் அடைப்பால் தேங்கும் தண்ணீர்

Update: 2026-08-09 19:41 GMT

வேலூரை அடுத்த சதுப்பேரி ஏரி படகு குழாம் அருகில் பைபாஸ் சாலையோரத்தில் உள்ள கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் செல்லும் தண்ணீர் கழிவுநீருடன் கலந்து சர்வீஸ் சாலையில் நீண்டதூரம் தேங்கி நிற்கிறது. இதனால் படகு குழாமுக்கு வரும் பொதுமக்களுக்கும், சாலையில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது. மேலும் இந்தக் கால்வாய் மீதுள்ள சிமெண்டு சிலாப்புகள் பல இடங்களில் உடைந்து திறந்த நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய் அடைப்பை சரிசெய்ய வேண்டும். கால்வாய் மீது போடப்பட்டுள்ள மூடிகளை சரி செய்ய வேண்டும்.

-செந்தில்குமார், வேலூர்.

மேலும் செய்திகள்