உத்தமபாளையத்தில் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் சுத்திரிகரிப்பு செய்யாமல் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே தினமும் சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.