வேலூர் கோட்டை நுழைவு வாசலில் அமைக்கப்பட்டுள்ள சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் வடிந்து செல்ல வழி இல்லாததால், தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் செல்லும்போது, அதன் அருகில் நடந்து செல்லும் மக்கள் மீது தண்ணீர் பீய்ச்சியடித்து தெளித்து விடுகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. தேங்கிய தண்ணீரை வடிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சூரியமூா்த்தி, வேலூர்.