மாரண்டஅள்ளி அரசு ஆஸ்பத்திரியில் மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் நோயாளிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே தாழ்வான பகுதிகளை சரி செய்து மழைநீர் தேங்காத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.