முறையான குடிநீர் வழங்க வேண்டும்

Update: 2026-09-20 14:27 GMT

திருச்சி 62-வது வார்டுக்கு உட்பட்ட அன்பிலார் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கப்படாமல் இருப்பதுடன், வினியோகிக்கப்படும் குடிநீரும் சில சமயங்களில் கலங்கலாக வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் போதிய குடிநீர் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே அப்பகுதியில் தங்குதடையின்றி தூய்மையான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்