சேலம் மாவட்டம் ஏ.கரடிப்பட்டி ஊராட்சி பெருமாபாளையம் கிராமத்தில் இருந்து உமையாள்புரம்-புத்திரகவுண்டன்பாளையம் செல்லும் சாலையின் கிழக்கு பகுதியில் ஆழ்துளைகிணறு கைபம்ப் அமைந்துள்ளது. இந்த கைபம்ப் பழுதாகி சேதமாகி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சேதமடைந்த கைபம்பை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.