குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படுமா?

Update: 2026-08-09 14:17 GMT

ஓசூர் டி.வி.எஸ். நகர் எதிரில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் எஸ்.பி.எம். காலனியில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையம் கடந்த 6 மாதத்திற்கு முன்பே கட்டி முடிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளது. ஆனால் மக்கள் பயன்பாட்டிற்காக இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எப்போது திறக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்