ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்

Update: 2026-09-26 18:34 GMT
கம்மாபுரம் அடுத்த சேப்ளா நத்தம் பகுதியில் செங்குளம் ஏரி உள்ளது. சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள இக்குளத்தை ஆக்கிரமித்து அதிக அளவில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. இதனால் குளத்தில் போதுமான அளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் விரைந்து ஆகாயத்தாமரைகளை அகற்றி குளத்தை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்