அக்கராயப்பாளையம் 17-வது வார்டில் வழங்கப்படும் குடிநீரில் அதிக அளவு குளோரின் வாசனை வீசுகிறது. இதனால் தண்ணீரை குடிப்பதற்கோ, சமையலுக்கோ பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே குடிநீரின் தரத்தை உயர்த்த பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.