மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரை ஊராட்சி அலுவலகம் அருகே குடிநீர் குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகியது என 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் இதனை ஆய்வு மேற்கொண்டு சரி செய்தனர். எனவே பொதுமக்கள் நலன்கருதி செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.