பர்கூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தினால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. பர்கூர் ஒன்றியம் ஐகொந்தம் பஸ் நிலையத்தில் பல மாதங்களாக தென்பெண்ணை ஆற்று கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. எனவே காலதாமதம் இன்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து உடைந்த குழாயை சீரமைத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பார்களா?