கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆர்.ஓ. குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பழுதடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் சுத்தமான குடிநீர் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த ஆர்.ஓ. குடிநீர் எந்திரத்தை சீரமைத்து, பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும்.