பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பையர்நத்தம் ஊராட்சியில், பையர்நத்தம், கதிரிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில், கதிரிபுரம் மற்றும் பெரிய ஏரி சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக அவ்வப்போது குடிநீர் வழங்கப்படுவது தொடர்ந்து நிறுத்தப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே அப்பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும்.