சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் ஓலைப்பட்டி கிராமம் பாரப்பட்டியில் குடிநீர் உடைந்து வீணாகியது என்று ‘தினத்தந்தி’யில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வீணாகியதை தடுத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.