திசையன்விளை தாலுகா அழகப்பபுரம் ஊராட்சி நன்னிகுளம் அம்மன் கோவில் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் சாலையும் வீணாகிறது. எனவே குழாய் உடைப்பை சீரமைத்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.