கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் கிராமத்துக்கு ஆற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் குடிநீரின்றி சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் சீராக குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.