சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி வாரச்சந்தை கூடும் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. தற்போது அந்த தொட்டியில் இருந்து குடிநீர் கசிந்து வீணாக வெளியேறுகிறது. எனவே அதை சரி செய்து பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீரை வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.