பெரம்பலூர் வட்டம் செங்குணம் புது கருப்புசாமி கோவில் தென்பகுதி தார்சாலையில் இருந்து ஐ.டி.ஐ. செல்லும் வழியில் உள்ள சுடுகாட்டில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாமல் உள்ள தண்ணீர் தொட்டியால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த தண்ணீர் தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இதற்காக செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.