பழுதடைந்த சுத்திகரிப்பு நிலையம்

Update: 2026-08-02 14:13 GMT

பர்கூர் ஒன்றியம் அச்சமங்கலம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும் அச்சமங்கலத்தை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் அச்சமங்கலத்தில் உள்ள அரசு குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தில் 5 ரூபாய் நாணயம் செலுத்தி தண்ணீர் பிடித்து சென்றனர். இந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த 1 ஆண்டுக்கு மேலாக பழுதடைந்து உள்ளது. இதனால் இதனை நம்பி இருந்த கிராம மக்கள் 30, 40 ரூபாய் கொடுத்து குடிநீர் கேன் வாங்கும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலதாமதம் இன்றி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பழுது நீக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.


மேலும் செய்திகள்